இந்தியா சர்வதேச அரங்கில் முன்னேறி வருவதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நாடு அதிக முன்னேற்றத்தை காண உதவிக் கரம் நீட்டவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதியை ஐரோப்பிய யூனியன் அதிகரிக்க வேண்டும் எனவும், வர்த்தக இடையூறுகளை நீக்கவேண்டும் எனவும் அவர் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாட்டு தலைவர்களிடம் கோரிக்கை வைக்கவுள்ளார். இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வது மற்றும் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகிய அம்சங்களும் பிரதமரின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.
நேற்றைய தினம் ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள 1600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அதிக வளர்ச்சியை பெற அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் உணர்ந்திருக்கின்றனர். இந்தியாவில் தற்போது 200 முதல் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன” என்றுகூறி பெருமைப்பட்டார்.
இதையும் படிங்க... எலான் மஸ்க்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 90 மில்லியனாக உயர்வு
தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசிய அவர், “உலகில் கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், இந்திய விவசாயிகள் உலகிற்கே உணவளித்திருக்கின்றனர். மனிதகுலம் பிரச்னைகளை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா அதற்கு ஒரு தீர்வை காண்கிறது” என்றார். பின்னர் பேசிய அவர், “இந்தியா ஒரு நாடாக இருந்தாலும்கூட, அங்கு இரண்டு அரசமைப்புகள் இருந்து வந்த நிலையில், அது தற்போது மாற்றப்பட்டிருக்கிறது” என்றார். இரண்டு அரசமைப்புகள் குறித்து பேசி, சூசகமாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டது பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்