Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல்- சச்சின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் திரும்பியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், 'டாஸ்' வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

image

முதல் 6 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய ருதுராஜ் அதன் பின்னர் வேகம் எடுத்தார். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கும் வேளையில், நடராஜன் வீசிய 18-வது ஓவரில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். ருதுராஜ் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தலா 6 பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த இன்னிங்ஸ் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் சமன் செய்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ருதுராஜ்  31 இன்னிங்ஸ்களில் 1,076 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் 34 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை அடித்த சுரேஷ் ரெய்னா இரண்டாமிடத்திலும், ரிஷப் பண்ட் (35), தேவ்தத் படிக்கல் (35) ஆகிய இருவரும் 3ம் இடத்திலும் உள்ளனர்.

image

நேற்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. ஐபிஎல் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் சிஎஸ்கே அணி சார்பில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் ஓபனிங் பார்ட்னர்சிப் வைத்த ஜோடி என்ற பெருமையை ருத்துராஜ், கான்வே படைத்தது.

இதையும் படிக்கலாம்: தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சிஎஸ்கே வெற்றி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்