Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், மின்னல் தாக்கியதில் பல மாவட்டங்களில் மக்கள் சிலர் உயிரிழந்தனர்.

Bihar: 17 people died due to storm and lightning in 8 districts, CM Nitish announced compensation of 4 lakhs

பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், தலா 4 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

Bihar news: 17 killed due to lightning, thunderstorm | Mint

"மோசமான காலநிலையில் முழு விழிப்புடன் இருக்கவும், இடியுடன் கூடிய மழையைத் தடுக்க அவ்வப்போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்," என்று நிதிஷ் குமார் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்