அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வந்தது. சில நாட்கள் உயிரிழப்பு எதுவும் இல்லாமலும் கடந்தன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய தினசரி தொற்று எண்ணிக்கை, நேற்று இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. 84 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துதுறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிக்கலாம்: "அரசு மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை நடக்கவில்லை"- ஈரோடு சுகாதார அதிகாரி விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்