பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேச, பாடல்கள் கேட்க மற்றும் வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது.
நவீன காலத்தில் நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது செல்ஃபோன் பயன்பாடு. தற்போது செல்ஃபோனை நாம் பயன்படுத்தாத இடங்களே இல்லை எனக் கூறலாம். ஒருசில நேரங்களில் இந்த செல்ஃபோன் பயன்பாட்டால் நன்மைகள் இருப்பினும், சில நேரங்களில் அந்த செல்ஃபோனால் நாம் மட்டுமின்றி, மற்றவர்களும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்றேக் கூறலாம்.
அதுவும் பொது இடங்களில் இந்த செல்ஃபோனால் பெரும்பாலானவர்கள் பாதிப்படுவதை, நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது. குறிப்பாக பேருந்துகளில் பயணிக்கும்போது சில பயணிகள் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் அளவில் கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் செயலருக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து பயணிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது கைப்பேசி பயன்பாட்டிற்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்