Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜெர்மன், ப்ரெஞ்ச், ஜப்பானிய மொழிகளை கற்க நினைப்பவரா? - அண்ண பல்கலை. வெளியிட்ட அறிவிப்பு

ஜெர்மன், ப்ரெஞ்ச், ஜப்பானிய மொழிகளை கற்க நினைப்பவர்கள், வரும் ஜூலை 27 வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான மையம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்கள் மற்றும் Ph.D., பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது. ஜூலை 29 முதல் வகுப்புகள் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள், வாரத்துக்கு 3 நாட்கள் மாலை நேரத்தில் மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு சொல்லித்தரப்படும் என சொல்லப்பட்டுள்ளது. சான்றிதழ் படிப்பாக நடத்தப்படும் இந்த அந்நிய மொழிகள் கற்கும் படிப்புகளில் சேர ரூ.6,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

image

இதில் இணைய ஆர்வமுள்ள மாணவர்கள் "The Director, Centre for International Relations, Anna University, Chennai - 600025” என்ற பெயரில் ரூ.6,500-க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு 044-22358561 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... ஆதாரமில்லாமல் அவதூறு வீடியோ போடுவதா? - பயில்வான் ரங்கநாதனால் கொதித்துப்போன சுசித்ரா!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்