Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்? எலான் மஸ்க் சூசக பதில்

ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு எலான் மஸ்க் சூசகமாக பதிலளித்துள்ளார்.

பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் விலைக்கு வாங்கினார். 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கோடி) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிகிறது. ட்விட்டர் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு கைமாறுவதால் அந்த வலைதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் புகுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. அதேபோல, ட்விட்டர் நிறுவனத்திலும் பல மாற்றங்கள் நிகழும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் உண்டானது.

image

இந்த சூழலில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் நிறுத்தி வைத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேறு சில ஒப்பந்தங்களை முடித்துவிட்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் கைப்பற்றுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலைியல், அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் நேற்று கலந்துரையாடினார். ட்விட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகியதை அடுத்து, அதன் ஊழியர்களை எலான் மஸ்க் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்த சந்திப்பின் போது ஊழியர்களின் ஏராளமான கேள்விகளுக்கு எலான் மஸ்க் பதிலளித்தார். அப்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா என சிலர் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "ட்விட்டர் நிறுவனத்துக்கு வரும் வருமானத்தை விட செலவினங்கள் அதிகமாக உள்ளன. இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்காக சில மாற்றங்கள் இருக்கும். தங்கள் வேலை பறிபோய் விடுமா என சிறந்த ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை" எனக் கூறினார். இதில் "சிறந்த ஊழியர்கள்" என எலான் மஸ்க் அழுத்தமாக கூறியிருப்பதால், சுமார் ரக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் மறைமுகமாக தெரிவித்திருப்பதாகவே ட்விட்டர் பணியாளர்கள் கருதுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்