Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகல் - ரஷ்யா திடீர் முடிவு

2024ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்தத் தகவலை ரஷ்யா விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ் உறுதிபடுத்தியுள்ளார். 

image

உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உடனான பிரச்சினை வலுத்துள்ள நிலையில் நாசா உடனான கூட்டணியை முடித்துக்கொள்ள ரஷ்யா முடிவெடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷியா சர்வதேச விண்வெளி நிலையம், அதன் சொந்த சுற்றுப் பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ்  தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: அதிர்ச்சி தகவல்: 3 ஆண்டுகளில் 1700 பேரை பலிகொண்ட மனித- விலங்கு எதிர்கொள்ளல்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்