Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை

தனது கர்ப்பிணி மனைவியை உறவினர்கள் தாக்கியதால்தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி தனிராம் காவல் நிலையத்துக்குச் சென்றார். ஆனால் போலீசார் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த  தனிராம் என்பவரது மனைவி 6 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தனிராமின் மனைவியை அவரது உறவினர்கள் இருவர் அடித்து உதைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால் குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது தனிராமின் மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனது மனைவியை தாக்கியதால்தான் கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக கூறி தனிராம் காவல் நிலையத்துக்குச் சென்றார். கர்ப்பிணியான தனது மனைவியை தாக்கிய குட்டு, ராமஸ்வம் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து  தனிராம் தனது இறந்த குழந்தையை தூக்கிக்கொண்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நீதி கேட்டு வந்தார். சிசுவின் சடலத்துடன் வந்ததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனிராமின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்ரி, டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் தனிராம் கலைந்து சென்றார்.



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்