கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பல நாட்கள் முடங்கி கிடந்த மக்கள் தற்போது, கூண்டை விட்டு பறந்து சென்ற பறவைபோல ஊர் ஊராக பயணித்து வருகிறார்கள்.
இதன்காரணமாக ஃப்ளைட், ட்ரெயின், பஸ் போன்றவற்றின் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்து, டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் உட்பட எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பிய வண்ணம் உள்ளன. அதுவும் சம்மர் சீசனில் சொல்லவே வேண்டாம்.
அந்த வகையில், விமான நிலையத்தில் இருந்த நீண்ட வரிசையில் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்து இளைஞர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
28 வயதான wolf jenkinS என்ற இளைஞர் துருக்கியில் இருந்து லண்டன் செல்வதற்காக கடந்த ஜூன் 16-ம் தேதி மிலாஸ் போட்ரம் ஏர்போர்ட் சென்றிருக்கிறார். அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்ததை கண்ட ஜென்கின்ஸ் எப்படியாவது இந்த க்யூவில் சிக்காமல் சென்றிட வேண்டும் என எண்ணியிருக்கிறார்.
உடனே தன்னுடைய சாக்ஸை கழற்றி, ஷூ இல்லாமல் வெறும் காலுடன் தாங்கி தாங்கி ஏர்போர்ட்டில் நடந்திருக்கிறார் ஜென்கின்ஸ். இதை கண்ட ஏர்போர்ட் ஊழியர்கள் அவரை அணுகி விசாரித்த போது, தனக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டதாக ஜென்கின்ஸ் கூறியிருக்கிறார்.
உடனே அவரை வீல் சேர் மூலம் அழைத்துச் சென்று, வரிசையிலேயே நிற்காமல் சுலபமாக விமானத்தில் ஏறி சென்றிருக்கிறார். இந்த ட்ரிக்கை லண்டன் வந்து இறங்கும் வரை அந்த இளைஞர் மெயிண்டெயின் செய்து சிரித்துக் கொண்டே ஜம்மென்று வீட்டுக்கும் சென்றிருக்கிறார்.
ALSO READ:
நொடிப்பொழுதில் பூகம்பத்தை உணர்ந்த தந்தை.. மகளை தூக்கிக்கொண்டு ஓடிய வைரல் வீடியோ!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்