கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக்கொள்வது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு சாதகமான உத்தரவு இருப்பதாக மனுதாரரான மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தங்கள் தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற் கூராய்வு நடைபெற்றது என்றும், தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் வழக்கை முடிக்கக்கூடாது என்றும் வாதிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், ஏற்னவே தாம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்று கூறி இன்று காலை 10.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்