Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்ற பிற மாணவர்கள் நலனுக்காக..’ - அமைச்சர் பேட்டி

மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் நாளை மறுதினம் முதல் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

சின்னசேலம் தனியார் பள்ளி மீண்டும் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தையடுத்து கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது.

image

ஒவ்வொரு வகுப்பறைகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்தன. மேலும் வகுப்பறை கட்டிடங்களும் விரிசல் விட்டு சேதம் அடைந்தன இதனையே தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க வேண்டும் என மாணவ மாணவியரின் பெற்றோர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்திருந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும், பள்ளியின் தற்போதைய நிலை குறித்தும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பள்ளிக்குள்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் ஜடாவத்துடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

image

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் அறிவுறுத்தலின்படி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் மற்ற மாணவர்களின்கல்வி பாதிக்காத வகையில் அறியாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நாளை மறுதினம் முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

image

மேலும், “கள்ளக்குறிச்சி தொடர்பான நிலவரம் குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்துடன் கடந்த 14ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அது குறித்து முதற்கட்ட தகவலை அவர்கள் எழுத்துப்பூர்வமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அளித்துள்ளனர். கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட டிரைவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டவர்களின் சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். ஆலோசனையின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்