உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி, விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் ‘கஷ்டம்’ குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் பெயர் கிருத்தி துபே. நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எனது பென்சில் மற்றும் ரப்பர் (அழிப்பான்) விலை உயர்ந்து விட்டது. மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டதற்காக அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? மற்ற குழந்தைகள் என் பென்சிலைத் திருடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி இந்தியில் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. “சமீபத்தில் பள்ளியில் பென்சிலை தொலைத்தபோது அவளது அம்மா திட்டியதால் எரிச்சலடைந்த என் மகளின் மன் கி பாத் தான் இந்த கடிதம்” என்று வழக்கறிஞரான அவரது தந்தை விஷால் துபே கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்