ரயில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரயில்களின் முன்பதிவு பெட்டிகள் 'டிரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயிலில் (16723) அக்டோபர் 19 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் திருநெல்வேலி - கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயிலில் (16724) அக்டோபர் 20 முதல் எஸ் 11 என்ற பெட்டி கொல்லம் - திருநெல்வேலி இடையேயும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.
மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24 முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரயிலில் (16235) அக்டோபர் 28 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.
மேலும் இந்த டிரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூபாய் 70, முன்பதிவு கட்டணம் ரூபாய் 145, டிரிசர்வ்டு கட்டணம் ரூபாய் 110 என வரையறுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்