Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடங்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு..!முதல் நாளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள்.!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

image

அதன்படி முதல்நாளான நேற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்பு பிரிவினருக்கு காலை முதல் இரவு வரை இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்த கலந்தாய்வுக்கு மொத்தம் 129 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சிறப்புப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

image

இதில் ஒரு லட்சத்து 58,157 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

-எம்.ரமேஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்