Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டி 20 தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்

துபாய்: சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி ஒரு புள்ளி கூடுதலாக பெற்று 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி இந்தியாவைவிட 7 புள்ளிகள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்