Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் “செர்வாவாக்” தடுப்பூசி: இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கம்

புதுடெல்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், "கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோய் பெரிதும் தவிர்க்கக் கூடியதாக இருந்தபோதும், இந்த புற்றுநோயால் உலகில் ஏற்படும் மரணங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 லட்சம் இந்தியப் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் 75,000 பேர் உயிரிழக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்