Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது இதனால்தான்” - ஜி.எஸ்.டி. ஆணையர் கொடுத்த விளக்கம்

திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்தும்படி, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ரஹ்மான் தரப்பிலிருந்து, '6,79,00,000 ரூபாய் வரி செலுத்தவில்லை என கூறி, 6,79,00,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது எனவே நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பதில் மனு அளித்த ஜி.எஸ்.டி ஆணையர், 'வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படியிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் அபராதமும் விதிக்கப்பட்டது. 

image

மேலும் தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கவில்லை என்பதும், அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டதாகவும் ’’ ஜி.எஸ்.டி ஆணைய பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் ரஹ்மான் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு மனுவையும் விசாரித்த நீதிபதி, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்