Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குஜராத்தில் ரூ. 15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

குஜராத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு, 15 ஆயிரத்து 670 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

காந்திநகரில் நடைபெறும் மகாத்மா காந்தி மாநாடு மற்றும் கண்காட்சி மையம் உள்ளிட்டவற்றில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது அவர் இந்திய நகர்ப்புற வீடுகள் மாநாடு 2022-யை தொடங்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து நாளை கேவாடியாவில் பாதுகாப்புத்துறை கண்காட்சி உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கும் பிரதமர், குஜராத்தில் தீசா விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

image

இதே போன்று உத்தராகண்ட், உத்தரப்பிரதேசத்திலும்  பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 21ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அக்டோபர் 23ஆம் தேதி அயோத்தியா செல்லும் பிரதமர் மோடி, ராம ஜென்ம பூமியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். மேலும், சரயூ நதிக்கரையில் நதியில் நடைபெறும் பிரமாண்ட தீபாவளி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இதையும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் நிகழும் சூரிய கிரகணம் - இந்தியாவில் தெரியுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்