Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உ.பி.: பிளாஸ்மாக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுத்த ரத்த வங்கி.. நோயாளிக்கு நேர்ந்த கதி!

தொற்றுநோய்கள் பரவும் நேரத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக பல போலி பொருட்கள் சந்தைப்படுத்தப்படுவதும், வியாபாரப்படுத்தப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் அப்பாவி மக்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் ரத்தத்தின் பிளேட்லெட்கள் தேவை அதிகரித்திருப்பதால் இதனை காரணமாக வைத்து பல போலியான ரத்த வங்கிகள் அம்மாநிலத்தில் தலை தூக்கியிருக்கின்றன.

இந்த நிலையில், பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் ரத்த பிளாஸ்மா என்ற பெயரில் நோயாளி ஒருவருக்கு ரத்த வங்கியில் இருந்து சாத்துக்குடி ஜூஸை நிரப்பி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ரத்தத்தின் பிளாஸ்மாவும் சாத்துக்குடி ஜூஸும் ஒரே மாதிரி இருப்பதால் இதனை பயன்படுத்தி அவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

டெங்குவால் பாதித்தவர்களுக்கு பிளேட்லெட்களின் தேவையே அதிகமாக இருக்கும் நிலையில், பிரயாக்ராஜ்ஜில் ஜல்வாவில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதீப் பாண்டே என்பவருக்குதான் பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் அந்த நோயாளி முறையான சிகிச்சையை பெற முடியாமல் இறந்திருக்கிறார் என பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்த வீடியோ மூலம் அறிய முடிகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிளாஸ்மாவுக்கு பதில் ஜூஸை கொடுத்த அந்த ரத்த வங்கி போலியானது என்றும் அதனை சார்ந்தவர்களை கைது செய்திருப்பதாகவும் பிரயாக்ராஜ் காவல்துறை இயக்குநர் ராகேஷ் சிங் கூறியுள்ளார்.

இதனையடுத்து பேசியுள்ள உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக், டெங்கு நோயாளிக்கு போலி பிளாஸ்மா விநியோகிப்பது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், குற்றம் அறியப்பட்டால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்