Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வங்கி ஏன் திவாலாக கூடாது என்பதை ஆய்வு செய்த மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

2022 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று அறிஞர்களுக்கு இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

Image

பொருளாதாரத்தில் குறிப்பாக நிதி நெருக்கடிகளில் வங்கிகளின் பங்கு என்பது பற்றிய விரிவான ஆய்விற்காக இவ்விருது வழங்கப்பட உள்ளது. வங்கிகள் திவாலாவதை தவிர்ப்பது ஏன் இன்றியமையாதது என்பது அவர்களது ஆய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

Image

நவீன வங்கியியல் ஆராய்ச்சி, நம்மிடம் ஏன் வங்கிகள் உள்ளன, அவற்றை எவ்வாறு பொருளாதார நெருக்கடிகளில் குறைவாகப் பாதிப்படையச் செய்வது மற்றும் வங்கி சரிவுகள் எவ்வாறு நிதி நெருக்கடிகளை அதிகப்படுத்துகின்றன என்பது பற்றி அந்த ஆய்வில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், இலக்கியம், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  • மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் (மனிதனின் மூதாதையர்களான நியாண்டர்தால்கள் போன்ற உயிரினங்கள்) மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

Nobel Prize 2022

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகிய மூன்று அறிஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
  • இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் (Annie Ernaux) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளை தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும் அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்