Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

1921 முதல் 2022 வரை.. இட ஒதுக்கீடு போராட்டம் கடந்து வந்த பாதை ! - தமிழகமும், இந்தியாவும்!!

இந்தியாவில் இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை நீண்ட நெடியது. முன்னோடி மாநிலமாக தமிழகத்தில்தான் 1921லேயே இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை இந்தியா கடந்து வந்த பாதையும், தமிழகம் கடந்து வந்த பாதையையும் தனித்தனியாக தெரிந்துகொள்வது அவசியமானது. 

தமிழ்நாடு கடந்து வந்த பாதை :

> 1921ல் நீதிக்கட்சி அரசால் பிராமணர் அல்லாத வகுப்பினருக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கவதற்கான வகுப்புரிமை ஆணை வெளியிடப்பட்டது. உடனே பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

> 1928-ல் கடும் எதிர்ப்புக்கு நடுவே வகுப்புரிமை ஆணை அமல்படுத்தப்பட்டது.

> இதன்பிறகு இந்திய சுதந்திர போராட்டம் முடிந்து, அரசியல் அமைப்பு சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு, 1951ல் இந்த வகுப்புரிமை ஆணைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, வகுப்புரிமை அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதனை தொடர்ந்து வகுப்புரிமை ஆணைக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைப்பெற்றவுடன், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸின் குமாரசாமி ராஜ ஆட்சியில் 41% இட ஒதுக்கீடு பிராமணர் அல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது.

> பின்னர், கருணாநிதி ஆட்சியில், 1969ல் பிறப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை ஆராய சட்டநாதன் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ( கொடுத்த பரிந்துரையின் அடிப்பையில் 49% இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. இதன்பிறகு தான், பிறப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை ஆராய என இதே காரணத்துக்காக மத்தியில் 1979ல் மண்டல் கமிஷனை அமைத்தார் அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய். )

> 1979ல் எம்.ஜி.ஆர் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். இதை திமுக, திக போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தியது. இதன் பிறகு நாடாளுமன்ற தோல்வி, நட்பு தலைவர்களுடன் முரண், மாநிலத்தில் போராட்டம் என பல நெருகடிகளுக்கு சூழலவே பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எம்.ஜி.ஆர் கைவிட்டார். இதனை தொடர்ந்து 1980ல் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையிலிர்ந்த 49% இட ஒதுக்கீட்டை 68% ஆக எம்.ஜி.ஆர் உயர்த்தினார்.

> 1989ல், ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தமிழகத்தில் உருவாக்கப்பட்டது.

> 1993ல் இந்த 69% இட ஒதுக்கீட்டைப் பாதுக்காக்கும் சட்ட முன் வடிவை  ஜெயலலிதா கொண்டு வந்தார். இதன் விளைவாக 1994ல் தமிழகத்தில் அமலிலிருந்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இந்த 9வது அட்டவணையில் தான், அடிப்படை உரிமைகளுக்கு பாதுக்காப்பு வழங்கும் விதிமுறைகள் உள்ளது.  இதன் தொடர்ச்சியாக, மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 2009ம் ஆண்டு அருந்ததியினருக்கு என 3% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. 

image

இந்தியா கடந்து வந்த பாதை - 

இதை எளிமையாக, மத்திய மற்றும் மாநில அரசில் இருக்க கூடிய எஸ்.சி /எஸ்.டி இட ஒதுக்கீடு மற்றும் மத்திய மற்றும் மாநில அரசில் இருக்க கூடிய ஓபிசி இட ஒதுக்கீடு எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரிந்துகொண்டால் போதும்.

1. 1950ல் அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தும் போது, பல நூற்றாண்டாய் ஒடுக்கப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் இருக்கும் எஸ்.சி/ எஸ்.டி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என, அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்க்கீடு வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சி, இந்தியா முழுவதும் இருக்கும் எஸ்.சி/எஸ்.டி மக்களின் மக்கள் தொகை அடிப்படையில் எஸ்.சி பிரிவுக்கு 15 %, எஸ்.டி பிரிவுக்கு 7.5 % இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், பாராளுமன்ற ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலங்களில் இருக்கும் எஸ்.சி/எஸ்.டி மக்கள் தொகையின் அடைப்படையில் கூட்டவும் / குறைக்கவும் செய்து நடைமுறைப்படுத்தி கொண்டது. அந்த வரிசையில் தமிழகத்தில் எஸ்.சி பிரிவு 18% மற்றும் எஸ்.டி 1% ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மழை வாழ் மக்கள் குறைவாக இருந்ததால் 1% ஒதுக்கப்பட்டது. இதுவே பழங்குடிகள் மக்கள் தொகை அதிகம் இருக்கும் மாநிலங்களில் எஸ்.டி பிரிவுக்கான இட ஒதுக்கீடு 80 சதவீதத்துக்கு அதிகமாக கூட ஒதுக்கப்பட்டது.

இவை இப்படி தான் மத்திய மற்றும் மாநில அரசில் இருக்க கூடிய எஸ்.சி /எஸ்.டி இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

2. அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைப்படுதும் போது எஸ்.சி / எஸ்.டிக்கு கொண்டு வந்தது போல், ஒபிசி-க்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படவில்லை. ஆனால் அரசியல் அமைப்பில் 340ல் , பிறப்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுயிருந்தது. இந்த கமிஷன் இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டு, பிறப்படுத்தப்பட்டவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என ஒரு அறிக்கை சமர்பிக்க வேண்டும், இதன் அடிப்படையில், 1953-ல் காக்கா காலேல்கர் கமிஷன் (முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ) அமைக்கப்பட்டது. எந்த சாதிகளை பிறப்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார்கள். அதன்பின்பு, 1979ல் B.P.மண்டல் கமிஷன் ( இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ) உருவானது.

இது அனைவருக்கும் பரிட்சயமான கமிஷன். இவர்கள் கொடுத்த அறிக்கையில், ‘ இந்தியாவில் 52 % மக்கள் இதர பிறப்படுத்தப்பட்டோராக உள்ளனர் எனவே இவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்’ என அறிக்கை கொடுத்தார்கள். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பரிந்துரைத்தனர். ஆனால் மத்திய அரசின் கல்வி நிறுனங்களில் கொடுக்க வேண்டும் என பரிந்துரைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு, இந்த கமிஷன் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

image

இதற்கிடையில் தான் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியும் பிரதமராக இருந்தனர். இவர்களுக்கு அடுத்து ஜனதா தளம் கட்சி மத்தியில் ஒரு மைனாரிட்டி ஆட்சியை அமைத்து, வி.பி சிங் பிரதமரானார். வி.பி சிங் பிரதமரான பிறகு 1990 மண்டல் கமிஷன் உயிர்பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய பிரச்சனைகளையும், சிந்தனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார் வி.பி. சிங்.

இதன் தொடர்ச்சி, மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், முன்னேறிய சாதி மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லாததால், கடும் எதிர்ப்பு கிளம்பி வட இந்தியாவில் போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்றது. வி.பி சிங்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது மைனாரிட்டி ஆட்சியில் இருந்த ஜனதா தளத்தை, வெளியிலிருந்து பாஜக, கமியூனிஸ்ட் கட்சிகள் அதரவு அளித்து வந்தது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல் பிரச்சனைகளுடன் சேர்த்து பாஜகவின் அன்றைய தலைவர் அத்வானி, ரத யாத்திரை உள்ளிட்ட பல நெக்கடிகளை ஜனதா தளத்திற்கு கொடுக்கவே, வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்து, சந்திரசேகராவ் பிரதமரானார். இவருக்கு பிறகு நரசிம்மராவ் பிரதமராகிறார்.

நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியின் போது, 1992-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரனைக்கு வந்தது, அப்போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாம், ஆனால் கிரீமி லேயர் முறையில் அமல்படுத்தவேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.

அதாவது, பிறப்படுத்தப்பட்டவர்களில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமான வருமானம் பெறுபவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாம் எனவும் மொத்த இட ஒதுக்கீடு என்பது 50 % தாண்ட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ( அதாவது எஸ்.சி- 15%, எஸ்.டி- 7.5%, ஒ.பி.சி- 27%. மொத்தமாக 49.5% இட ஒதுக்கீடு தான் இருக்க வேண்டும் என்றது சுப்ரீம் கோர்ட்)

இந்த உத்தரவின் பெயரில் தான், மத்திய அரசின் பொதுதுறை நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில் ஒ.பி.சிக்கு 27% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. ( ஆனால் கல்வி நிறுவனங்களில் இல்லை.)

’’இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக பிறப்படுத்தப்பட்டவர்களில் வாய்ப்புகளை சுரண்டிக்கொண்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் சவுக்கடி. என் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி’’ என வி.பி. சிங் இந்த தீர்ப்பு குறித்து நெகிழ்ந்தார்.

image

மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, 2006ல் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் ஒ.பி.சிக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், அரசியல் அமைப்பு திருத்தப்பட்டு, 2007ல் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சிக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுது.

மாநிலங்களில் இருக்கும் ஓ.பி.சி இட ஒதுக்கீடு:

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் பிறப்படுத்தப்பட்டோர் ஆணைய உருவாக்கும் முன்பே ஓ.பி.சிக்கு 25% இட ஒதுக்கீடு 1951லேயே நடைமுறையில் இருந்தது. அடுத்தடுத்த காலங்களில் இந்த சதவீதம் அதிகரித்து ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு, எஸ்.சி- 18%, எஸ்.டி – 1% என மொத்தமாக 69% சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையிலிருந்தது.

முன்னதாக 1992ல் சுப்ரீம் கோர்ட் 50% இட ஒதுக்கீடை தாண்ட கூடாது என்ற உத்தவு பிறப்பித்திருந்ததால், தமிழக அரசின் தொடர்ந்து அழுத்ததை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு போலவே மற்ற மாநிலங்களும் சரியான விளக்கம் கொடுத்து அறிக்கை சமர்பித்தால், அந்த மாநிலங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியது. இவ்வாறு மத்திய / மாநில இட ஒதுக்கீடு விதகம் பொறுத்து பொதுதுறை, வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது.

இத்தனை அசாதாரண நிகழ்வுகளை கடந்து நிற்கும் இந்த இட ஒதுக்கீட்டை தான், இன்று இட ஒதுக்கீட்டால் தான் நாடு முன்னேறாமல் இருக்கிறது, இட ஒதுக்கீட்டால் தான் திறமையானவள் எல்லாம் வெளிநாட்டுக்கு போகிறார்கள் என்ற விமர்சனங்கள் மேம்போக்காக எழுப்பப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு உச்சநீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய அளவில் ஏற்கவே 49.5 சதவீட

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்