உடல் உறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் நோயாக விளங்குகிறது புற்றுநோய். புற்றுநோய்கள் பல வகைகளில் இருந்தாலும், பெண்களை அதிகம் பாதிக்கும் வகையிலும் குணப்படுத்த இயலாததாகவும் உள்ளது கருப்பை வாய்ப் புற்றுநோய். இந்த புற்றுநோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேலான பெண்கள் பாதிக்கிறார்கள் என்றும், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மரணிக்கிறார் எனவும் கூறுகிறது புள்ளிவிவரம்.
ஆனால் நவீன மருத்துவ உலகில் கருப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் முன்கூட்டியே தடுக்க தடுப்பு மருந்தும் உள்ளது. எச்.பி.வி (HPV) தடுப்பு மருந்து என்பது புற்றுநோய்க்கான 6 விதமான வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். சிறு வயதில் பெண்களுக்கு செலுத்துவதன் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
தடுப்பு மருந்து விலை அதிகம் என்பதால், மத்திய அரசும், சீரம் நிறுவனமும் இணைந்து 'செர்வாவோக்' என்ற பெயரில் தடுப்பு மருந்தை தயாரிக்கிறது. இதன் ஒரு டோஸ் விலை 400 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் என்றும், ஜனவரி மாதத்தையொட்டி பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர் மருத்துவர்கள். மருத்துவம், சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்தும், அதனைத் தடுக்கும் தடுப்பூசி குறித்தும் பரந்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்