இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளரான முகமது அலி மற்றும் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமதும் இடம் பெற்றுள்ளனர். இந்த புதுமுக பந்து வீச்சாளர்கள் இருவரும் இங்கிலாந்து அணியை அச்சுறுத்துவார்கள் என தெரிகிறது. இவர்கள் இருவரும் கடந்து வந்த பாதை...
முகமது அலி: இவரை முன்னாள் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர், ஜராய் தராகியாட்டி வங்கி அணிக்காக விளையாட கடந்த 2018 வாக்கில் முதன்முதலில் தேர்வு செய்தார். அதாவது சியால்கோட் கிரிக்கெட் வட்டாரத்திலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது அலியை தேர்வு செய்யச் சொல்லி பரிந்துரைகள் வந்த வண்ணம் இருந்தன. அமீர் வாசிம் கிரிக்கெட் அகாடமியில் இவர் பயிற்சி பெற்றதால் அவர்களின் பரிந்துரையும் கூடுதல் வலு சேர்த்தது. அப்போது அவருக்கு 26 வயது தான். ஆனால் தனது பந்து வீச்சு திறன் மூலம் ஆட்டத்தில் உடனடியாக தாக்கம் செலுத்தும் வல்லமை கொண்டவர். அதை அந்த வாய்ப்பில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
0 கருத்துகள்