உலகில் 200 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த முதல் நபராக உருவெடுத்திருக்கிறார் எலான் மஸ்க்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் உலகில் 200 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த முதல் நபராக உருவெடுத்திருக்கிறார் எலான் மஸ்க்.
இந்திய ரூபாய் மதிப்பின்படி எலான் மஸ்க் ரூ.16.55 லட்சம் கோடி இழப்பை சந்தித்து உள்ளார். கடந்த சில வாரங்களாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு குறைந்து வருவதால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் கணிசமான பங்குகளை சந்தையில் எலான் மஸ்க் விற்பனை செய்தார். இதனால் எலான் மஸ்கிற்கு அவரின் சொத்துமதிப்பில் பெரும்பகுதி குறைந்தது.
கடந்த 27ம் தேதி மட்டும் டெஸ்லா நிறுவனப் பங்குகள் 11 சதவீதம் சரிந்தது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இப்போது, அதிகபட்சமாக 200 பில்லியன் இழப்பை சந்தித்த முதல் மனிதராகவும் எலான் மஸ்க் ஆகியிருக்கிறார் என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.
தவற விடாதீர்: கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு 15 லட்சம் இழப்பீடு கொடுத்த நிறுவனம்.. ஏன் தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்