வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. வெற்றியை ருசித்துவிடும் என நினைத்தபோதிலும்கூட, விக்கட்-கீப்பராக நிற்கவைக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் முக்கியமான பல கேட்ச்களை விட்டதே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக மெஹிடி ஹசனின் கேட்ச்களை அவர் அதிகம் கோட்டைவிட்டார். அவரைப்போலவே வாஷிங்டன் சுந்தரும் கூட, கேட்ச் பிடிக்கவேண்டிய நேரத்தில் அதற்கான முயற்சிகூட எடுக்காமல் நின்றுகொண்டிருந்தார்.
தொடர்புடைய செய்தி: `பார்ட் டைம் கீப்பர் எதற்காக?’- ராகுல் கேட்ச் விட்டதற்கு கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்
இவர்களின் இந்த காட்சிகளை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது ஒருபக்கமென்றால், களத்திலிருந்தே இவர்களை விமர்சித்தவர்கள் மறுபக்கம். இவற்றுக்கு பதிலளித்துள்ளார் கே.எல்.ராகுல். அது தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அப்படி என்னதான் சொன்னார் கே.எல்.ராகுல் என்கின்றீர்களா? சொல்கிறோம்!
கே.எல்.ராகுலின் அந்த பதிலுக்கு முன்னர், தினேஷ் கார்த்திக் - ரோகித் ஷர்மாவின் கொந்தளிப்பை நாம் காண்பதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கவாஷிங்டன் சுந்தர் தன்னை நோக்கி வந்த பந்தை பிடிக்க முயற்சி கூட செய்யாமல் ஏன் அப்படியே நின்றுக்கொண்டிருந்தார் என்பதை புரிந்துகொள்ளக்கூடிய முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் பேசுகையில், “ஆட்டத்தின் இறுதியில் கே.எல்.ராகுல் கேட்ச்சை கைவிட்டது மற்றும் அந்த நேரத்தில் சுந்தர் ஏன் உள்ளே வரவில்லை என்பதெல்லாம் ஏனென்றே எனக்கு புரியவில்லை. ஒருவேளை மைதானத்திலிருந்த லைட் வெளிச்சம் காரணமாக அப்படி இருந்தனரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் பந்தை பார்த்திருந்தால், அவர் அதை பிடித்திருக்க முயற்சித்திருக்க வேண்டும். இந்த கேள்விக்கு, அவரால் மட்டுமே பதிலளிக்க முடியும். அவர் சொல்லவேண்டும் அதை. நேற்று சிறந்த நாள் அல்ல, ஆனால் மோசமான நாளும் அல்ல” என்றுள்ளார்.
தினேஷ் கார்த்திக் மட்டுமன்றி, கே.எல்.ராகுல் - வாஷிங்டன் சுந்தர் நடவடிக்கைகளுக்கு ரோகித் ஷர்மாவும் அவர்களை கேள்வி கேட்டிருந்தார். சொல்லப்போனால், ரோகித் ஷர்மா கோபப்பட்டிருந்தார். அதுவும் அவர் அதை மைதானத்துக்குள்ளேயே, ஆட்டத்தின்போதே கடுமையாக வெளிக்காட்டினார். குறிப்பாக கடைசி சில ஓவர்களில் மிராஸின் கேட்ச்சை இரண்டு முறை இழந்தபோது, மிகவும் கோபமாகி, ஆபாசமாக திட்டினார் ரோகித் ஷர்மா.
இதுதொடர்பான செய்திக்கு: வாசிங்டன் சுந்தருக்கு எதிராக கோபப்பட்ட ரோகித் சர்மா! ஆபாசமாக பேசினாரா? வைரலாகும் வீடியோ
இப்படியாக அணிக்கு உள்ளேயும் வெளியேயும் பல எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், போட்டிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்தார் கே.எல்.ராகுல். அவர் பேசுகையில் இந்தியா இரண்டு கேட்ச்களை விட்டதை ஒப்புக்கொண்டார். “அதுதான் கிரிக்கெட்.... எதிர்பார்க்காததையே இங்கு எதிர்பார்க்கவேண்டும். கிரிக்கெட் இருக்கும்காலம் வரை, இதுமாதிரியான விஷயங்களும் இருக்கும். வங்கதேச அணியினர் இறுதிவரை மிகச்சிறப்பாக போராடி விளையாடினர். குறிப்பாக மெஹிடியின் அந்த இன்னிங்ஸ்...” என்றுள்ளார் கே.எல்.ராகுல்.
இவரின் இந்த நிலைப்பாடும் தற்போது நெட்டிசன்களிடையே விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்