புதுடெல்லி: மிஸ்டு கால் மூலம் பண மோசடி என்ற புதுவிதமான டெக்னிக்கை மோசடியாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அண்மையில் இந்த வழிமுறையைப் பின்பற்றி டெல்லிவாசி ஒருவரிடம் ரூ.50 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர். ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகுமொபைல் தொலைந்து போனது அல்லது பழைய சிம் சேதமடைந்ததாக கூறி டூப்ளிகேட்சிம்மை மோசடியாளர்கள் பெற்று விடுகின்றனர். இதையடுத்து, பணப் பரிமாற்றத்துக்கு இறுதி பாதுகாப்பாக கருதப்படும் ஓடிபி மோசடியாளர்களின் புதிய சிம்முக்கு சென்று விடுகிறது. இதையடுத்து, அந்த மோசடிக் கும்பல் வங்கி கணக்கிலிருந்த அந்த வாடிக்கையாளரின் பணத்தை எளிதாக தங்களது கணக்குக்கு மாற்றிக் கொண்டு விடுகிறது. இதனை "சிம் ஸ்வாப்" மோசடி என்கின்றனர் போலீஸார். இதே வழியில்தான் டெல்லிவாசியின் மொபைல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து பணத்தை சுருட்டி ஏமாற்றியுள்ளனர்.
0 கருத்துகள்