Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இதுதான் சிஎஸ்கே-வின் பிளான்? தமிழக வீரர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்துகொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் அந்த அணி சந்தித்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் உலகம் முழுவதிலிருந்து 405 கிரிக்கெட் வீரர்கள் களமிறங்குகின்றனர்.

நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், ஜெகதீசன் ஆகிய வீரர்களை கழட்டிவிட்டது. இவர்களுக்கு மாற்றாக ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது சிஎஸ்கே. எனவே இதற்காக அணியில் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்துகொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் அந்த அணி சந்தித்துள்ளது.

image

கடந்த 5 வருடங்களில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. 2012ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியில் 8 தமிழக வீரர்கள் இருந்தனர். அதன்பின் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2022 சீசனில் வெறும் 2 தமிழக வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். ஹரி நிஷாந்த் மற்றும் என் ஜெகதீசன் ஆகிய அந்த இரு வீரர்களும் வரவிருக்கும் மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். எனவே விமர்சனங்களை தவிர்க்கும் பொருட்டு 2023 ஐபிஎல் சீசனில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சிஎஸ்கே முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை ஐபிஎல் போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது ரூ.20.45 கோடி கையிருப்பு இருக்கிறது. அதனை வைத்து மினி ஏலத்தில் உள்ளூர் வீரர்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி அஜிதேஷ், மணிமாறன் சித்தார்த்,  சூர்யா, சஞ்சய் யாதவ், நாராயண் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளூர் அளவில் சிறப்பாக விளையாடியவர்கள். அவர்களை மினி ஏலத்தில் வளைத்துப்போட சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

இதுவரை சிஎஸ்கே அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்கள்

2012: ஸ்ரீகாந்த் அனிருத்தா, எஸ் பத்ரிநாத், ஆர் அஷ்வின், அபினவ் முகுந்த், யோ மகேஷ், முரளி விஜய், குத்தேதுர்ஸ்ரீ வாசுதேவதாஸ், கணபதி விக்னேஷ்,

2013: அபராஜித், ஸ்ரீகாந்த் அனிருத்தா, எஸ் பத்ரிநாத், விஜய் சங்கர், ஆர் அஷ்வின், ரவி கார்த்திகேயன், முரளி விஜய்

2014: அபராஜித், அஷ்வின், விஜய் சங்கர்

2015: பாபா வாபராஜித், ஆர் அஸ்வின்

2018: என் ஜெகதீசன், முரளி விஜய்

2019: என் ஜெகதீசன், முரளி விஜய்

2020: ஜெகதீசன், ஆர் சாய் கிஷோர், முரளி விஜய்,

2021: ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன்,

2022: ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்