அல் வக்ரா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று ஜப்பான் - குரோஷியா அணிகள் மோதின. அல் வக்ராவில் உள்ள அல் ஜனூப் மைதானத்தில் நடந்த இப்போட்டியை ஜப்பான் வீரர்கள் சிறப்பாக தொடங்கினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டெய்சன் மேடா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் குரோஷியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்ததால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றன. வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அணியும் கோல் அடிக்காததையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா 3 கோல்களை அடித்தது. அதேநேரம் ஜப்பான் 1 கோல் மட்டுமே அடித்தது. இதையடுத்து குரோஷியா 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
0 கருத்துகள்