Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டீமில் ஏன் மாற்றம் வேண்டும்? இங்கு என்ன பிரச்சனை? - அஜய் ஜடேஜா கேள்விக்கு DK-ன் நச் பதில்!

டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தத் தொடங்கிய ஹர்திக் பாண்டியா ஏன் பழைய முறையை மாற்ற விரும்புகிறார், இங்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பினார், அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளித்து பேசியுள்ளார்.

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டியில் இரண்டு அணிகளும், தலா ஒரு போட்டியில் வென்று தொடர் தற்போதைக்கு 1-1 என சமனில் இருக்கிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 2 ரன்களில் இந்திய அணி வீழ்த்த, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. தொடரை நிர்ணயிக்கும் கடைசி டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

முதல் டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் பந்துவீச, இந்திய அணி பரபரப்பான கடைசி கட்டத்தில் முதல் டி20 போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி ஒரு ஓவரை வீச ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு இருந்த நிலையில், பந்தை அவர் வீசாமல் அக்சர் பட்டேலுக்கு பந்துவீசுமாறு பணித்தார்.

image

போட்டி இந்தியாவிற்கு சாதகமாக முடிந்த பிறகு அக்சர் பட்டேலுக்கு ஏன் கடைசி ஓவர் கொடுத்தீர்கள் என்பதை பற்றி ஹர்திக் பாண்டியாவிடம் கேட்கப்பட்ட போது, “ ஐபிஎல் போட்டிகளில் அவர் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். மேலும் போட்டி முடிவை பொறுத்து நான் பார்க்கவில்லை, கடுமையான நேரங்களில் இளம் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கான சோதனையாகவே இதை பார்க்கிறேன், இத்தகைய கடினபோட்டிகளில் இளம்வீரர்கள் இதை செய்யமுடிந்தால், பெரிய போட்டிகளில் அணிக்காக இதையே மீண்டும் இந்த இளம் அணியால் செய்துகாட்ட முடியும்” என்று தெரிவித்தார். மேலும் அவருடைய பந்துவீச்சில் தொடர்ந்து பயிற்சி செய்துவருவதாக தெரிவித்தார்.

image

நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில், முதல் போட்டியில் இருந்த ஹர்சல் பட்டேலை வெளியில் வைத்துவிட்டு அர்ஸ்தீப்சிங்கை அணிக்குள் கொண்டுவந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அர்ஸ்தீப் வீசிய நோ-பால்களால் இந்திய அணி 27 ரன்களை அதிகமாக கொடுத்தது. போட்டியை இந்திய அணி தோற்றது 16 ரன்கள் வித்தியாசத்தில், அவர் 27 ரன்களை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்திய அணி இந்த போட்டியையும் வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றிருக்கும். இலங்கை அணியினர் கடைசி 4 ஓவர்களில் 66 ரன்களை விளாசி இந்தியாவிற்கு கடினமான இலக்கை நிர்ணயித்தனர்.

image

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விகுறித்து க்ரிக்பஸ் உடனான உரையாடலில் பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, “ இந்திய அணிக்கு பொறுப்பேற்கும் ஒவ்வொரு கேப்டனும், குறைந்தது மூன்று வருடங்களில் இந்தியாவை பொறுத்தவரை, கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற போது, இந்திய அணி விளையாடும் விதத்தை மாற்ற விரும்பினார்?. பின்னர் ரோஹித் ஷர்மா பொறுப்பேற்றார், அப்போது அவரும் இந்திய அணி விளையாடிய விதத்தை மாற்ற விரும்பினார். இப்போது ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார், அவரும் இந்திய அணியை மாற்ற விரும்புகிறார். புதிதாக வருபவர்கள் அனைவரும் பழைய முறையை மாற்ற விரும்புவது ஏன்? இங்கு என்ன சிஸ்டம் பிரச்சனை? இருக்கிறது, எதற்காக மாற்ற வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

image

அதற்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், “ 2013க்குப் பிறகு இந்திய அணி, பல நாடுகளின் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதில்தான் பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். 2014-ல் யாரும் வந்து எதையாவது மாற்றியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் நாங்கள் இதற்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இங்கு, 2007 (டி20)க்குப் பிறகு நாங்கள் உலகக் கோப்பையை வென்றதில்லை. எங்களிடம் உலகின் சிறந்த T20 லீக் உள்ளது, சிறந்த வீரர்கள், மிகவும் திறமையான வீரர்கள் மற்றும் சிறந்த பெஞ்ச் வலிமையைக் கொண்டுள்ளோம். கோப்பைக்கான விஷயங்கள் நடக்கவில்லை என்றால், அணுகுமுறையில் ஏதோ தவறு இருக்கிறது என்று தான் பொருள் படுகிறது. அது மாற வேண்டும்” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்