நியூசிலாந்து: வெலிங்டனில் நடைபெறும் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியது நியூஸிலாந்து. இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ரன்களில் டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பி 7 விக்கெட்டுகளை 138 ரன்களுக்கு இழந்து பாலோ ஆனைத் தவிர்க்க திணறி வருகின்றது.
இங்கிலாந்து தன் புதிய பிராண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வருகின்றது. எதிரணி அடிக்கும் ரன்களெல்லாம் கணக்கல்ல நாங்கள் சாத்தி எடுப்போம் என்ற ஆக்ரோஷ பேட்டிங்கும் பிறகு திடீர் டிக்ளேர், பென் ஸ்டோக்ஸின் அற்புதமான பந்து வீச்சு மாற்றம் களவியூகம், மற்றும் நெருக்கடி கொடுக்கும் அட்டாகாச கேப்டன்சியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் பரிமாணத்தையே மாற்றி வருகின்றது. 21/3 லிருந்து ஹாரி புரூக், ஜோ ரூட் மூலம் அதிரடி 302 ரன்கள் கூட்டணி அமைத்தது, இன்று ஹாரி புரூக் வந்தவுடனேயே 186 ரன்களில் ஹென்றி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது முழங்கை அருகே பட்டு தெறித்த பந்தை ஹென்றி அபாரமாகப் பிடித்தார்.
0 கருத்துகள்