புது டெல்லி: சீன தேச தொடர்பு கொண்ட 138 பெட்டிங் செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அவசர முடிவாக அரசு எடுத்துள்ளதாக தகவல். இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் இந்திய தேச பாதுகாப்பு கருதி சீன தேச மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகளுக்கு அப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உள்துறை அமைச்சகம் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்