டெல்லி சென்று திரும்பிய தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் இன்று காலை சந்தித்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவர் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன என்பதை அறிவித்துள்ளார். அதன்படி .
முன்னதாக, நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் தெரிவிப்பதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். அதற்கிடையேதான் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையேயான தனித்தனி சந்திப்புகள் நடந்தன. அதையொட்டி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்க பாஜக முயற்சி என தகவல் வெளியானது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செய்தியாளர்கள் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது அவரும் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி இணைந்து பேசினர். அவர்கள் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டு மக்கள், திமுக ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். இடைத்தேர்தலில் திமுக தோல்வியை தழுவும். தமிழ்நாட்டின் நலனுக்காக, அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் - இபிஎஸ்ஸிடம் கூறியுள்ளோம். ஜெயலலிதா கூட திமுகவை தீய சக்தி என்றே சொன்னார். உறுதியான, நிலையான அதிமுக-வை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே ஓபிஎஸ் - இபிஎஸ் இணைய வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்தி உள்ளோம்.
திமுக-வை எதிர்க்க உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைய வேண்டும். அவர்கள் ஒரே அணியாக, ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக-வின் நிலைப்பாடு என்ன, எங்கள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா அல்லது என்ன என்பது பற்றி விரைவில் அறிவிப்போம். பாஜக நிலைப்பாட்டை தெரிவிக்க, பிப்ரவரி 7-ம் தேதி வரை அவகாசம் உள்ளது” என்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்