Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். வணிக நோக்கில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோள்களை இந்த மிஷனில் சுமந்து சென்றுள்ளடக்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதில், வணிக நோக்கில் செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்