Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சுப்மன் கில் அவுட்டா? - டிஆர்எஸ் குழப்பம்: ஸ்மித், லயன் நடுவருடன் வாக்குவாதம்!

அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று சுப்மன் கில் ஒரு பந்தை கால்காப்பில் வாங்க பிளம்ப் போல் தெரிந்தது. ஆனால், கள நடுவர் கெட்டில்ப்ரோ ‘நாட் அவுட்’ என்றார். ஆஸ்திரேலியா ரிவியூ கேட்டது. அதன் பிறகே அனைத்துக் குழப்பங்களும் ஏற்பட்டன.

ரிவியூ ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக இல்லை என்பதோடு ஒரு ரிவியூவையும் அவர்கள் இழந்தனர். சம்பவம் 18-வது ஓவரில் நடந்தது. நேதன் லயன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்திற்கு ஷுப்மன் கில் இறங்கி வந்து ஆடி கால்காப்பில் வாங்கினார். பேட்டும் அருகில் இருந்ததால் பேட்டில் பட்டது போல் தெரிந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்