Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் 'ப்ளூ டிக்' கட்டண சந்தாவை தொடங்கிய மெட்டா

சான் பிரான்சிஸ்கோ: தங்களது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு 'ப்ளூ டிக்' பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய முறையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது அமெரிக்க நாட்டில் மட்டுமே நடைமுறைக்கு வந்ததாக தெரிகிறது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு 'ப்ளூ டிக்' கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது மெட்டா. இப்போது இதனை கட்டண சந்தா முறையில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்