Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs AUS 4-வது டெஸ்ட் | முதல் இன்னிங்ஸில் ஆஸி. 480 ரன்கள் குவிப்பு - 6 விக்கெட்டுகளை அள்ளிய அஸ்வின்

அகமதாபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த இன்னிங்ஸில் கவாஜா 180 ரன்கள் மற்றும் கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இதற்கு கவாஜா மற்றும் கிரீன் இடையேயான பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர்கள் இருவரும் 208 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்