Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா போட்டியில் இந்தியாவின் குகேஷ் சாம்பியன்!

பெர்லின்: உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், முன்னாள் உலக விரைவு செஸ் சாம்பியனான உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷை வீழ்த்தினார். இரட்டை எலிமினேஷன் போட்டி என்பதால் குகேஷுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இதில் குகேஷ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் நோடிர்பெக் அப்துசட்டோரோவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்