Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இலங்கை பவுலர் மதீஷா பதிரானாவின் பவுலிங் ஆக்‌ஷன் ஆய்வுக்கு உரியதா?

கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பல ஆக்‌ஷன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு அவை த்ரோ என்று முத்திரைக் குத்தப்பட்டு பிறகு ஐசிசி பயிற்சி மையத்தில் ஆக்‌ஷன் சரி செய்யப்படுவதை நாம் பார்க்கின்றோம். இப்போது தனியார் டி20 கிரிக்கெட் போட்டிகளின் சந்தை மதிப்பு மற்றும் வணிக எழுச்சி காரணமாக கிரிக்கெட்டின் அடிப்படை விதிமுறைகளும் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய் விடும் என தெரிகிறது. அந்த வகையில் ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா வீசுவது உண்மையில் பவுலிங் என்ற வகையினத்துக்குள் வருமா என்று நிபுணர்கள் விளக்க வேண்டும்.

உடனே மலிங்கா வீசினாரே என்று பேசக்கூடாது. ஏனெனில் மலிங்காவின் ஆக்‌ஷ்னில் அவர் கையை வலது புறமாக படுக்கை வசமாக வைத்து வீசினாலும் கை ஒரு கட்டத்தில் தோள்பட்டைக்குச் சமமாகவோ அல்லது சற்றே உயரமாகவும் வருகின்றது. அதே போல் பிடல் எட்வர்ட்ஸ் என்ற மேற்கிந்திய தீவுகள் பவுலரை எடுத்துக் கொண்டால் ரவுண்ட் ஆர்ம் ஆக்‌ஷனில் ஒரு கட்டத்தில் வீசும் முன் கை தோள்பட்டைக்கும் மேல் நேராக வருகின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்