Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு: 'விசாரணைக்கு ஒத்துழைப்பேன்; பதவி விலகமாட்டேன்' - பிரிஜ் பூஷன் சிங் அறிவிப்பு

கோண்டா: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக அவர்கள், டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதில் ஒன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் உள்ளது.

காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ள போதிலும் மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்து விலகவேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்