Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டி20 பிளாஸ்ட்: அதிவேக சதம்; வரலாறு படைத்தார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இன்று (சனிக்கிழமை) 34 பந்துகளில் சதம் விளாசி புதிய டி20 வரலாறு படைத்துள்ளார். இந்த டி20 தொடரின் வரலாற்றில் 34 பந்துகளில் சதம் கண்ட 2வது வீரர் ஆனார் சான் அபாட்.

சர்ரே அணி ஒரு கட்டத்தில் 66/4 என்று தத்தளித்துக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இறங்கினார். மைதானம் முழுதும் பந்துகள் பறந்தன 11 சிக்சர்களை பறக்க விட்டார். 44 பந்துகளில் 110 நாட் அவுட் என்று வரலாற்று நாயகனாகத் திரும்பினார். சர்ரே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் விளாசியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்