Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மீண்டும் சர்பராஸ் கானுக்கு துரோகம்: இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஓவலில் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியதால் அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் மும்பையின் நட்சத்திர பேட்டர், ரன் மெஷின் சர்பராஸ் கான்.

ஆஸ்திரேலியா அணி இங்கு வந்திருந்த போதும் 360 டிகிரியில் அவுட் ஆகும் சூரிய குமார் யாதவுக்குத்தான் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டதே தவிர சர்பராஸ் கான் அப்போதும் ஒதுக்கப்பட்டார். சர்பராஸ் கான் 37 முதல் தரப் போட்டியில், அதாவது சிகப்புப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் 3,505 ரன்களை 79.65 என்ற வேறு எந்த நடப்பு இந்திய வீரரும் வைத்திராத சராசரியில் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள் 9 அரைசதங்கள் அடங்கும். இந்த வடிவத்திலேயே 393 பவுண்டரிகளையும் 66 சிக்சர்களையும் விளாசியுள்ளார் சர்பராஸ் கான். சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட்டும் சாதாரணமல்ல 79.65 வைத்திருக்கிறார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 301 நாட் அவுட். கடைசி 6 முதல் தரப் போட்டிகளில் மூன்று சதங்கள் ஒரு அரைசதம். இன்னும் என்னதான் வேண்டுமாம் இங்கு செலக்ட் ஆக? அணித்தேர்வுக்குழுவுக்கும் பிசிசிஐக்கும் ஜெய் ஷாவுக்குமே வெளிச்சம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்