இந்திய அணியின் சர்வதேச ஸ்டார்கள் ஆடும் சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் நமக்கு புரியாத புதிராகவே அமைகின்றன. நேற்றைக்கு முந்தைய நாள் 127 ரன்களை எடுக்க முடியாமல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ஆர்சிபியிடம் தோற்றது. நேற்று தட்டிப் போட்டு தூக்க வேண்டிய டெல்லி அணியின் 130 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் கடந்த ஐபிஎல் சாம்பியனும் நடப்பு டேபிள் டாப்பர்ஸும் ஆன குஜராத் டைட்டன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்கிறது. இத்தனைக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து கிரீசில் இருக்கின்றார். என்னதான் நடக்கின்றது?
இம்மாதிரி போட்டிகளின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பினாலோ, அனைத்தையும் உண்மை என நம்பி பார்க்கும் ரசிகர்களில் சிலர் நெகட்டிவ் விமர்சனம் என்று கோபமடைகின்றனர். ஐபிஎல் 1000 போட்டிகளுக்கும் மேல் சென்று விட்டதால் அதன் நம்பகத்தன்மையை உறுதியாக எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நம்பகத்தன்மை கொண்ட போட்டிகளுக்கு இடையே இத்தகைய நம்பகமற்ற போட்டிகளும் கலந்து ஊடாடி நிற்கின்றன என்பதுதான் நிதர்சனம்.
0 கருத்துகள்