Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த பெரிய தவறுகள்!

ஐபிஎல் 2023 தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பெரிய அணி என்று பலராலும் விதந்தோதப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப முதல் 5 போட்டிகளில் 4-ல் அதிரடி வெற்றி கண்டு அசத்தியது. ஆனால், நேற்று 214 ரன்களை தடுத்தாட்கொண்டு வெற்றி பெற முடியாமல் சோக்கர்ஸ் ஆகி கடைசி பந்தில் சன் ரைசர்ஸிடம் தோல்வி கண்டதோடு, கடைசி 6 போட்டிகளில் ஒன்றில்தான் வென்றுள்ளது.

அப்து சமத், கிளாசன் இருவரும் 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 42 ரன்களை விளாசியதில் ஆட்டமே மாறிப்போனது. அதுவும் அந்த கடைசிப் பந்து விக்கெட் நோ-பாலால் முறிவடைய, அடுத்த பந்து சிக்சருக்குப் பறந்தது, சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றது. பெரிய வலியான தோல்வியாகும். கடைசி ஓவரில் 17 ரன்கள் ஹைதராபாத் அணிக்குத் தேவை. அப்துல் சமத் முதல் 4 பந்துகளில் ஒரு சிக்சருடன் 11 ரன்களை எடுத்தார். யான்சென் 5வது பந்தை சிங்கிள்தான் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் 4 எடுத்தால் டை, சூப்பர் ஓவர், 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. சமத், கடைசிப் பந்தை சுழற்றி அடிக்க லாங் ஆஃபில் கேட்ச் ஆனது, கொண்டாட்டங்கள் தொய்வடைந்தது, காரணம் நோ-பால் சைரன் ஒலித்ததே. அடுத்த பந்து யார்க்கர் முயற்சி இரண்டு இன்ச்சில் தோல்வி அடைய சமத் சிக்சருக்குத் தூக்கிவிட்டார். சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்