சென்னை: சென்னை செரினிடி ரோட்டரி சங்கம், சென்னை இன்டஸ்ட்ரியல் சிட்டி ஆர்சி மற்றும் சென்னை மில்லினியம் ஆர்சி ஆகியவை இணைந்து 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளது. டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 2023 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டி ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இதில் செயின்ட் பீட்ஸ், நெல்லை நாடார், ஸ்ரீ முத்தா, டான் போஸ்கோ, பிஎஸ் சீனியர், பிஎஸ்பிபி மில்லீனியம், ஓமேகா என்ஐஓஎஸ், எபனேஸர், ரணசந்திரா பப்ளிக் ஸ்கூல், ஜேப்பியார் பள்ளி, ஜிஹெச்எஸ்எஸ் புதூர், வித்யா மந்திர், பிஎஸ்பிபி, கே.கே. நகர் ஒமேகா சிபிஎஸ்இ, ஜெயேந்திர சரஸ்வதி (கோயம்புத்தூர்), கிரேஸ் மெட்ரிக்குலேஷன் (மதுரை) ஆகிய 16 அணிகள் கலந்துகொள்கின்றன.
இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது. இந்த தொடரின் ஆட்டங்கள் ராயப்பேட்டை, வண்டலூர், கேளம்பாக்கம், தரமணி, தாம்பரம், வேளச்சேரி ஆகிய பகுதியில் உள்ள மைதானங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்