சென்னை: இந்திய டிஜிட்டல் சாதன சந்தையில் சியோமி பேட் 6 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரி என சியோமி பேட் 6 சிறப்பு அம்சங்களில் கவனம் ஈர்க்கிறது. இதன் விலை குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2014 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது சீன தேச நிறுவனமான சியோமி. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். படிப்படியாக பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியது. அந்த வகையில் சியோமி பேட் 6 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சியோமி பேட் 6 நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
0 கருத்துகள்