Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நீரஜ் சோப்ரா 88.77 மீ. ஈட்டி எறிந்து அசத்தல்: உலக தடகள இறுதிப் போட்டிக்கு டி.பி.மானுவும் தகுதி

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதனால், அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மென்மேலும் வலுத்துள்ளது. இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று இன்று நடந்தது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தன் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்