நியூயார்க்: அமெரிக்க ஓபனில் 31 வருடங்களுக்குப் பிறகு அதிக வயதில் வெற்றியை பதிவு செய்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா.
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 38 வயதான சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீரரான வாவ்ரிங்கா 7-6 (7-5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை வீழ்த்தினார். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் 31 வருடங்களுக்குப் பிறகு அதிக வயதில் வெற்றி பெற்ற 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1992-ம் ஆண்டு அமெரிக்க வீரர் ஜிம்மி கார்னர்ஸ் தனது 40 வயதில் வெற்றியை பதிவு செய்திருந்தார்.
0 கருத்துகள்