2015 மற்றும் 2019 இரு உலகக் கோப்பை தொடர்களிலும், நிறைய ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டிங்கில் எண்ணற்ற பங்களிப்பு செய்த அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான், வெகு விரைவில் மக்கள் மனதிலிருந்து அகன்றுவிட்டார். கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பவர்கள், அதன் நுட்பங்களை அறிந்தவர்கள், வரலாற்று உணர்வு உள்ளவர்கள் முந்தைய வீரர்களை நினைவில் கொள்வார்கள். அந்த வகையில் இன்னும் நினைவில் நிற்பவரே ஷிகர் தவான்.
சேவாக் ஓய்வு பெற்ற பிறகே அவரது இடத்துக்கு அவரைப்போலவே ஒரு வீரர் தேவை என்ற நிலையில் இடது கை வீரராகவும் இந்திய அணியில் கண்டெடுக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் அறிமுகப் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் 187 ரன்களை விளாசி அறிமுக அதிக ஸ்கோர் சாதனையை தன் வசம் வைத்திருப்பவர். 7 சதங்கள் 5 அரைசதங்களுடன் 34 டெஸ்ட்களில் 2315 ரன்கள் 40.61 என்ற நல்ல சராசரியுடன் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது ஒரு புரியாத புதிர்தான்.
0 கருத்துகள்