சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அபார கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார். குல்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். அஸ்வின், சீராஜ் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
0 கருத்துகள்